மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.


மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது. இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 


இவரது உறவினர்கள் கடந்த 1990 முதல்  சென்னை கோவிலம்பாக்கம் முகாமில் வசித்து வருகின்றனர். சமூக ஆர்வலரான இவர் மரங்கள் நடுதல், மழைநீர் சேகரிப்பு,  மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சைக்கிள் பயணம் தொடங்கினார். காஞ்சிபுரம்,  வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் திருப்பூர் கோவை திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு  வந்தார் .

காந்தி மண்டபம் முன் இந்த சைக்கிள் பயணத்தை  சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மற்றும் இலியாஸ், சிவா ஆகியோர் வரவேற்றனர். தர்மலிங்கம் பிரதாபன் செய்தியாளரிடம் கூறியபோது வரும் இளம் தலைமுறைகள் இந்த நாட்டை காக்க வேண்டும் மரம் நட வேண்டும் தண்ணீரை சேமிக்க வேண்டும் பறவைகளை பாதுகாக்க வேண்டும் இயற்கையிலையும் பாதுகாக்க வேண்டும். விலங்குகளை பாதுகாக்க வேண்டும் பாதுகாத்தால் நீங்களும் வளரமாக இருக்கலாம் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பேரப்பிள்ளைகளும் வளமாக இருக்கும். வரும் நாட்களில் நாட்டுக்காக பெரும் பாடுகள் பட வேண்டும் இளைஞர்கள் நல்ல வழியிலே நல்ல நோக்கத்தோடு இந்த உலகத்தை பாதுகாக்க வேண்டும். 


இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் எத்தனையோ பொக்கிஷங்கள் இந்த மண்ணில் இருக்கின்றன அதனுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இளம் இளம் தலைமுறைகள் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது என்று  அவர் கூறினார், மற்றும் கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பித்த சைக்கிள் பயணம் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, பாண்டிச்சேரி வழியாக சென்னை சென்றடைகிறது சுமார் 38 மாவட்டத்தை. 3000 கிலோ மீட்டரை ஒரு மாதத்தில் பயணத்தை பயணித்து மரம் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிரதாபன் வருகின்ற 22 8 23 அன்று சென்னை மெரினா கடையில் தனது பயணத்தை முடிக்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/