திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

.com/img/a/

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுமான மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


இந்த காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் விதமாக இன்று (25-8-2023) அரசு பள்ளிகளில் காலை உணவுகள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 14வது வார்டு அனுப்பர்பாளையம் பிரசாத் வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவு வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மு. ரத்தினசாமி, மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் செயலாளர் ந. வேலுச்சாமி 11 வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், திருஞானம்(காங்கிரஸ்), ஆறுமுகம் (கம்யூனிஸ்ட்-சிபிஎம்), பகுதி துணை செயலாளர் மணிமாறன், இளைஞர் அணி பிரகதீஸ்வரன், சங்கர்(மதிமுக), வார்டு துணைச் செயலாளர் கஜேந்திரன், தொழிலாளர் அணி பத்மநாபன், கட்டுமான அணி நிர்வாகி பூபதி, ஆதிதிராவிடர் அணி பிரகாஷ், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராஜேஷ், ராகுல், நந்தா, கிஷோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad