திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடுகுப்பை இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடுகுப்பை இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து கணிக்கர் பழங்குடியின மக்கள் குடுகுடுப்பை சார்ந்த இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இன வகுப்பை சார்ந்தவர்களுக்கு காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடுகுடுப்பை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்து கணிக்கர் பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சான்றிதழ் வழங்குவது குறித்து தமிழகம் முழுவதிலும் உள்ள வருவாய் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இது வரை கணிக்க இன பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்று வழங்கப்படவில்லை எனவும் குறிப்பாக திருவண்ணாமலை கோட்டாட்சியரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை முறையிட்டும் தங்களுக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்கப்படவில்லை எனவும் இதனால் தங்களது குழந்தைகள் உயர்கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  கணிக்கர் இன மக்கள் குற்றம் சாட்டினர். 


தங்களுக்கு உடனடியாக பழங்குடியின சான்று வழங்க கோரி இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவண்ணாமலை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக  நுழைவாயில் முன்பாக சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லாத வகையில் காவல்துறையினர் இரும்பு கதவுகளை மூடி உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இதனால்  அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  


- செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/