செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, காட்டாங்கொளத்தூர் பகுதியில் புதிய சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, காட்டாங்கொளத்தூர் பகுதியில் புதிய சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, காட்டாங்கொளத்தூர் பகுதியில் 6.18 இலட்ச மதிப்பீட்டில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலை கடக்கவும்,விபத்துக்களை தடுக்கும் விதமாக 6 மற்றும் 7  வது வார்டு நகர மன்ற உறுப்பினர் காயத்ரி சரவணன்  சொந்த செலவில்  புதிய சிக்னல் திறப்பு விழா நடைபெற்றது.


மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் நடைப்பெற்ற இத்திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிக்னலை திறந்து வைத்தார்.


அதனை தொடர்ந்து மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  வீடுதோறும் மக்கும்,மக்காத கழிவுகளை பிரித்து வழங்கும் பணிக்காக 18 இலட்ச மதிப்பீட்டில் 9 பேட்டரி வாகனத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து துவங்கி வைத்தார், இந்நிகழ்வில்  நகர்மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad