திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தளபதி விஜய் கிளை மன்ற துவக்க விழா.. பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தளபதி விஜய் கிளை மன்ற துவக்க விழா.. பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் 30 வார்டுகள் உள்ளன. இதில் ஏழாவது வார்டு கோட்டைமேடு பகுதியில் மக்கள் இயக்கம் தலைவர் தளபதி விஜயின் உத்தரவின் கீழ் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனையின்படி திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் கோட்டைமேடு பகுதியில் தளபதி விஜய் அவர்களின் கிளைமன்ற துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது



இதில் திருப்பூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஷேக்பரீத், கிளை மன்ற பெயர் பலகையை திறந்து வைத்தார்,இத்துடன் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் எழுதுகோல், கையேடுகள் ஆகியவைகளை வழங்கினார்.



இதில் நகர தலைவர் சார்லி தலைமை தாங்கினார்,நகர இளைஞரணி செயலாளர் அபு வரவேற்புரை நிகழ்த்தினார்.


இந்நிழ்ச்சியில் நகர தலைமை நகர இளைஞரணி தலைமை நிர்வாகிகள் கிளைமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டடு சிறப்பித்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/