இலங்கையில் கடற்படையினாரால் சிறை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் , படகுகளையும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

இலங்கையில் கடற்படையினாரால் சிறை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் , படகுகளையும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை சிறைப்படுத்தியுள்ள இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மன்னாா்குடியில் முக்குலத்துப்புலிகள் கட்சியின் தலைவர் ஆறு.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் 


எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை சிறைப்படுத்தியுள்ள இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க கோரி முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 


நேற்று எல்லையோரத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து  திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 21 நாட்கள் சிறையில் அடைத்து உள்ளனர். மீனவர்களின் கைது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த மீனவர்களையும், படகுகளையும், மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இனிவரும் காலங்களில் இந்த சம்பவங்கள் நடக்காமல் துரிதமான நடவடிக்கைகள் எடுக்க மத்திய, மாநில அரசுகளை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் முக்குலத்து புலி ககட்சியினர் மீனவர்களை ஓன்றுதிரட்டி  மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/