வேலூர் அடுத்த காட்பாடியில் உணவாகும் தாவரங்கள ரெட் கிராஸ் அவைத் தலைவர் ஜனார்த்தனன் சான்றிதழ் வழங்கி பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

வேலூர் அடுத்த காட்பாடியில் உணவாகும் தாவரங்கள ரெட் கிராஸ் அவைத் தலைவர் ஜனார்த்தனன் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

வேலூர் மாவட்டம் காட்பாடி வீர பிரம்மேந்திர சுவாமிகள் பாரம்பரிய இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உணவாகும் மருத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி சித்த மருத்துவர்களுக்கு புதுச்சேரி ஆரோவில் வழங்கப்பட்டது பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் விழா சரஸ்வதி கலைக்கூடத்தில் இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு ஆராய்ச்சி மையத்தின் மேலாண்மை இயக்குனர் கா இருசப்பன் தலைமை தாங்கினார்.


வேலூர் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் யூத் ரெட் கிராஸ் அவை தலைவர் எஸ் ரமேஷ் குமார் ஜெயின் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். 


புதுச்சேரி ரெட் லேப் சங்கத்தின் இயக்குனர் எம் துரைராஜ் வாழ்த்தி பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் என் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
பயிற்சி பெற்ற முப்பது பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/