திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

.com/img/a/

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் தாராபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதை பயன்படுத்துவதால் உடலுக்கும் மனதிற்கும் மிகவும் கெடுதல் இதன் மூலமாக குடும்பம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் மேலும் உங்களது நண்பர்கள் கடைகளில் வாங்குவது தெரிந்தால் அதனை தலைமை ஆசிரியர்களுக்கு காவல் துறையினர்களுக்கு தகவல் அளிக்கவும் இதனால் அவர்களை போதை அடிமையிலிருந்து மீட்டெடுக்கலாம் என்று அறிவுரை வழங்கினார்.... இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad