விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.


விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர்  மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.



தமிழ்நாடு  முதலமைச்சர், அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம்  காணும்  வகையில்  சிறப்பான  நிர்வாகத்தை  தமிழகத்தில்  ஏற்படுத்தி உள்ளார்கள்.   அதில், பள்ளிக்கல்வி  மற்றும்  உயர்கல்விக்கென   அதிக  அளவில்  நிதி ஒதுக்கீடு  செய்து  மாணாக்கர்கள்  பயன்பெறும்  வகையில்  எண்ணற்ற  திட்டங்களை தமிழகத்தில்  சிறப்பாக  செயல்படுத்தி  வருகிறார்கள்.  


அறிவுப்போட்டி  நிறைந்த இக்காலகட்டத்தில்  மாணவர்கள்  நவீன  காலத்திற்கு  ஏற்ப  தங்களது  அறிவுத்திறன் மற்றும்  தனித்திறன்களை  வளர்த்துக்  கொள்ள  வேண்டும்  என்பதை  கருத்தில்  கொண்டு, சாமானிய  மக்களும்  தரமான  கல்வியை  பெரும்வகையில், பள்ளிக்கல்வி மட்டுமின்றி  கல்லூரி  வரையிலும்  இலவசமாக  கல்வியை  மாணாக்கர்கள் பெறுவதற்கும் கல்வி  மற்றும்    வேலைவாய்ப்புகளில்  தலைசிறந்து  விளங்கிடும் மாநிலமாக  தமிழகம்  திகழ்நதிடும்  வகையில்  தமிழக  அரசால்  சிறப்பான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. 
\

அதுமட்டுமன்றி, மாணாக்கர்களுக்கு  அறிவுக்  கூர்மை  ஏற்படுத்துவது  மட்டுமின்றி ஆரோக்கியமான   உடல்   நலத்தையும்  அளிப்பதற்காக  சத்தான  உணவுகளை வழங்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிக்கப்பட்டு  முன்னோடி  திட்டமாக  செயல்படுத்தப்பட்டு  வரும்  காலை  உணவு திட்டம்இ  பெண்  கல்வியை  ஊக்குவிக்கும்  வகையில்  புதுமைப்பெண்  திட்டம்  போன்ற  திட்டங்கள்
 பிற  மாநிலங்களுக்கு  முன்மாதிரியாகவும்  திகழ்ந்து  வருகிறது.    

      இதுபோன்று  பெற்றோர்களின்  சிரமத்தை  பொருளாதார  ரீதியாக  குறைத்துவிடும் வகையில்,   தமிழ்நாடு  முதலமைச்சர் , அனைத்து மாணாக்கர்களுக்கும்  பெற்றோர்களின்  நிலையிலிருந்து  அனைத்து நலத்திட்டங்களையும்  வழங்கி  வருகிறார்கள்.
பள்ளி  மாணாக்கர்கள்  பயன்பெறும்  வகையில், செயல்படுத்தப்பட்டு  வரும் திட்டங்களின்  ஒன்றான  விலையில்லா  மிதிவண்டி  வழங்கும்  திட்டத்தின்  கீழ் சிவகங்கை  மாவட்டத்தில்  2022-2023ஆம்  கல்வியாண்டில்  11-ஆம்  வகுப்பு  பயின்ற மாணவ  மாணவியருக்கான  விலையில்லா  மிதிவண்டி  வழங்கும்  அடிப்படையில் மாவட்டத்திலுள்ள  68  அரசு  பள்ளிகள்  உள்ளிட்ட  105  அரசு  மற்றும்  அரசு  உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும்  4270  மாணவர்கள்  மற்றும்  6323 மாணவியர்கள்  என  , ஆக மொத்தம் 10593 மாணாக்கர்களுக்கு  மிதிவண்டிகள்  வழங்கப்பட  உள்ளன.  இதில், மாணவியர்களுக்கு  தலா  ரூ.4760 மதிப்பீட்டிலும்   மாணவர்களுக்கு  தலா ரூ.4900
மதிப்பீட்டிலும்  என,  மிதிவண்டிகள்  வழங்கப்படவுள்ளன. 
 விலையில்லா  மிதிவண்டிகள்  வழங்கும்  திட்டத்தின்  கீழ்  பயன்பெற்றுள்ள சிவகங்கை  அரசு  மகளிர்  மேல்நிலைப்பள்ளி  மாணவி  செல்வி  யோகலெட்சுமி அவர்கள்  தெரிவிக்கையில்:
 என்  பெயர்  யோகலெட்சுமி.  
நான்  ,
 சக்கந்தி  ஊராட்சியிலிருந்து  எனது  பள்ளிக்கு வருகிறேன்.  
மினி  பேருந்தின் மூலம் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தேன். முன்னதாக ,
சில  நேரங்களில்  குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர  இயலாத சூழ்நிலை இருந்தது. 
அதனால், எனது படிப்பில் முழுமையான கவனமும் செலுத்த இயலாமல் இருந்தது.  அச்சமயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவுரையின்படி என்னை போன்ற மாணவியர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் பள்ளியின் மூலம் வழங்கப்பட்டது. தற்சமயம் நான் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகிறேன்.  என்னுடைய படிப்பிலும் முழு கவனம் செலுத்தி, சிறந்த முறையில் பயில்கின்றேன். இதுபோன்ற வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த  தமிழ்நாடு முதலமைச்சர்  , அனைத்து மாணவியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என ,செல்வி யோகலெட்சுமி  தெரிவித்தார்.  
 விலையில்லா  மிதிவண்டிகள்  வழங்கும்  திட்டத்தின்  கீழ்  பயன்பெற்றுள்ள சிவகங்கை  அரசு  மகளிர்  மேல்நிலைப்பள்ளி  மாணவி   சரண்யா  தெரிவிக்கையில்:
என்  பெயர்  சரண்யா.  நான் , பெருமாள்பட்டி  ஊராட்சியிலிருந்து  எனது  பள்ளிக்கு வருகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தை  சேர்ந்தவள். எனக்கு மிதிவண்டியில் பள்ளிக்கு வருவதற்கு மிகுந்த ஆசை இருந்தது. எனது குடும்ப சூழ்நிலையின் பொருளாதார ரீதியாக மிதிவண்டி வாங்குவதற்கான போதுமான அளவில் பொருளாதார வசதி இல்லை. 
என்னைப் போன்ற மாணவியர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையில், எங்களுக்கு கற்றலுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி வருவது மட்டுமன்றி, மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் புத்துணர்வு ஏற்படுத்திடும் வகையில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் மூலமாக எங்களுக்கு மிதிவண்டி அளித்துஇ எங்களுக்கு மன மகிழ்ச்சியை , தமிழ்நாடு முதலமைச்சர்  ஏற்படுத்தி தந்துள்ளார்கள். 

இதன் வாயிலாக குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரஇயலுகிறது.  எனது படிப்பிலும் முறையாக கவனம் செலுத்த முடிகிறது.  இத்திட்டத்தின் மூலம் எங்களை பயன்பெற செய்த,  தமிழ்நாடு முதலமைச்சர், மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்
கொள்கிறேன் என, சரண்யா தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/