மதுரையில் புதிய மண்டல அலுவலக கட்டிடம் கட்டும்பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மதுரையில் புதிய மண்டல அலுவலக கட்டிடம் கட்டும்பணியினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.


மதுரை மாநகராட்சி சர்வேயர் காலணி அருகில் மண்டலம் 1 அலுவலகத்திற்கு ரூ. 4 கோடி மதிப்பீட்டில்  புதிய அலுவலக கட்டிடம் கட்டும்பணியினை,  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி,   தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி , தெரிவிக்கையில்:- மதுரை மாநகராட்சியில், 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.  மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.  ஆணையூர் பகுதியல் தற்காலிகமாக இயங்கி வந்த  மண்டலம் 1-க்கு புதிய அலுவலக கட்டடிடம் கட்டுவதற்கு சர்வேயர் காலனி ரவுண்டானா அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசு ஒப்புதல் பெறப்பட்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  


இப்புதிய கட்டிடம் பொதுமக்கள் எளிதில் அனுகும் வகையில்  தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடமாக கட்டுவதற்கும், கட்டுமான பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், அறிவுறுத்தலின்படி நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்து முனைப்போடு நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் பகுதியல் கிராம சாவடி கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) , மூ.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார்,   துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வீரராகவன், மாமன்ற உறுப்பினர் த. செங்கிஸ்கான்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/