வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள் இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியில் உள்ளார்கள் இதில் ஐந்து ஆண் ஆசிரியர்கள் உள்ளனர். ராமன் என்பவர் அறிவியல் ஆசிரியராக கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
இவர் பல ஆண்டுகளாக 9-ம் வகுப்பு மற்றும் 10- வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறி உள்ளார் இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மாணவியிடம் அத்து மீறியதால் மாணவி தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளார்கள் இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களை சமாதானம் படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினர் .பெற்றோர்கள் தரப்பில் மகளிர் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் பணி செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். மேலும் தவறு செய்த ஆசிரியர் மீது 2 மணி நேத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக