திறந்தவெளி கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

திறந்தவெளி கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், ஒரு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் இருந்ததை கண்டறிந்தார். இது குறித்து உடன் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் இந்த ஆழ்துளை கிணற்றின் மேல்பகுதி உடனடியாக பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்கும்படி  உத்த ரவிட்டார்.


திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளால் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தங்கள் பகுதி கிணறுகளை அல்லது அங்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். 


மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், கேட்டுக் கொண்டுள்ளார்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/