திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர்- புதுப்பேட்டை ரோடு முதல் மாக்கனூர் ரோடு வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக சாலை அமைப்பு பணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்



திருப்பத்தூர் மாவட்டம், அச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட  மூக்கனூர் புதுப்பேட்டை ரோடு முதல் மாக்கனூர் ரோடு வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக  தார் சாலை அமைக்கும் பணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.  



இந்த நிகழ்ச்சியில் கந்திலி  தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார்,  அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார்,  கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, பூரிகமானிட்டா ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ஒப்பந்ததாரர் தாமோதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.  



மூக்கனூர் புதுப்பேட்டை கூட்டு சாலையிலிருந்து மாகனூர் ரோடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரை தார் சாலை ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் பணி துவங்கியது. 



இந்த சாலை 5 வருடம் பராமரிப்பதற்காக ரூபாய் 7 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/