இருசக்கர வாகனங்களில் சென்று நகை திருடிய குற்றவாளி சென்னையில் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

இருசக்கர வாகனங்களில் சென்று நகை திருடிய குற்றவாளி சென்னையில் கைது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 03.07.2023-ம் தேதி இரவு 09.30 மணி அளவில் திலீப் குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் வெளியே சென்று வீடுதிரும்பிக் கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் திலீப்குமார் மனைவியின் கழுத்தில் இருந்த சுமார் மூன்று சவரன் மதிப்புடைய தாலி, குண்டுகள் மற்றும் கால்காசுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 


இதன் அடிப்படையில் திலீப்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனி வழிகாட்டுதலின்படி காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்  வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை  தேடி வந்த நிலையில்  பாலா (எ) பலராமன்(வயது 28) த/பெ பழனி, காட்பாடி சார்ந்தவர்  சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காட்பாடி காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை சென்று கிண்டி சிக்னல் அருகே குற்றவாளியை  மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு விசாரனை நடத்தி குற்றவுளிகளிடமிருந்து 1.5 சவரன் தங்க நகை மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றியுள்ளனர். 


அது மட்டுமல்லாது கடந்த 06.08.2023-ம் தேதி காட்பாடி உழவர் சந்தை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச்சென்றதாக மற்றொரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. மேற்படி குற்றவாளி திருடிச்சென்ற தங்க நகைகளை அடையாளம் காட்ட காட்பாடி அருகே மூலகசம் மலைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது குற்றவாளி தவறி கீழே விழுந்ததில் இடது கை மணிக்கட்டு  முறிவு ஏற்பட்டு உரிய மருத்துவ ஆவணங்களுடன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/