புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்இரட்டை தேரோட்டம் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் நடைபெறும்.இந்த வருட இரட்டை தேரோட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இரட்டை தேரோட்டத்தை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டு கடந்த ஒன்பது நாளாக தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டாகபடித்தாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரட்டை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரில் வீற்றிருக்க ஆட்டம்பாட்டத்துடன் இளைஞர்களும், பக்தியுடன் பெரியவர்களும் இரண்டு தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரானது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நிலை பெற்றது. பக்தர்கள் வழிநெடுகிலும் கோலமிட்டு தேரினை வரவேற்றனர். இந்நிகழ்வில் சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, ஆவின்கோன்பட்டி, அம்மாபட்டி, ஆலவயல், பிடாரம்பட்டி, கண்டியாநத்தம் ஆகிய ஊர்களையும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருள் பெற்று சென்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.தேரோட்டம் நிறைவடைந்ததும் தேரில் இருந்த மலர்களை பக்தர்கள் ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர்.தேரோட்டம் நிறைவு பெற்றதும் தேர் சென்ற வீதியில் சாமி திருவீதி உலா நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக