கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஆர்ச் எதிரில் நெய்வேலி நகர காவல் துறை சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்ப் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசு போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த கோரி அறிவுறுத்தியுள்ள நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நெய்வேலி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது அவர்களின் தலைமையில் போதை பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது அவர்கள் பேசுகையில் போதைப் பழக்கத்திற்கு எதிராக ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டின் மேலும் எனது குடும்பத்தின் நிலையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை கூறுவேன் போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களே மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் எனவும் மேலும் போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு துணை இருப்பேன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றன உளமாற உறுதி கூறுகிறேன் என்று கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் நெய்வேலி பகுதியைச் சென்ற பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கையேந்தி இயக்க பதாகையில் கையெழுத்திட்டு போதை பொருள் குறித்த விழிப்புணர்வில் தங்களின் பங்களிப்பை செலுத்தினார், நிகழ்ச்சியில் நெய்வேலி வர்த்தக சங்க நிர்வாகிகள் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயதேவி வைத்தியநாதன் மற்றும் காவலர்கள் மற்றம் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக