மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவிக்கு உதவிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவிக்கு உதவிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாற்று திறனாளி கல்லூரி மாணவிக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கல்லூரிக்கு தேவையான பாட புத்தகங்கள் எழுதுபொருட்கள்  உதவி செய்தார்.


குடியாத்தம் மோர்தானா அடுத்த போடியப்பனூர் கிராமத்தை சேர்ந்த கௌரி மணி இவர்  மாற்றுத்திறனாளி  கல்லூரி மாணவி சமீபத்தில் குடியாத்தம் நகர பெருங்குழு தலைவர் சவுந்தரராஜன் அவர்களின் முயற்சியால் GTM கல்லூரியில் BA தமிழ் பிரிவில் சேர்ந்தார். 

இவருடைய ஏழ்மை நிலையை கண்டு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்களும் பொருளுதவி செய்தார். தற்போது குடியாத்தம் ஒன்றியம் பட்டு துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகனாஅவர்கள் மூலம் அந்த மாணவிக்கு முதல் வருடத்திற்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள், Assignments க்கு தேவையான A4 Sheets ஆகியவற்றை நேற்று  GTM கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் துரை செல்வம் சமூக ஆர்வலர் மகேஷ்பாபு TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் K.சேகர் GTM கல்லூரியின் கணிதத்துறை தலைவர் கருணாநிதி இயற்பியல் துறை தலைவர் தாமரை கணித அறிவியல் துறை தலைவர் அருளானந்தம் பேராசிரியர்கள் ஶ்ரீதர்  செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/