திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. கல்லூரி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கவுரவப்படுத்தப்பட்டன.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.. கல்லூரி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கவுரவப்படுத்தப்பட்டன..

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்று பிஷப் தார்பு கல்லூரி.இந்த பிஷப் தார்பு கல்லூரியில் இந்த ஆண்டு 77 வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் விக்டர் லாரன்ஸ் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின குறித்து சிறப்புரை ஆற்றினார். 


இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் மூலம் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டு சிலம்பாட்டம் நடைபெற்றது, கல்லூரியில் புதிய மென்பொருட்களை உருவாக்கி கொடுத்த கணினி பயன்பாட்டு இளங்கலை பட்டப்படிப்பு துறையை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் கௌதம்'மிற்கு கல்லூரியின் இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.. நாட்டு நல பணி திட்ட அலுவலர் திருமதி ஏஞ்சலின் பிரபா நன்றி உரை ஆற்றினார்.


கல்லூரியில் துணை முதல்வர் பிரேம்நாத் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.. மேலும் விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் ராஜேஷ், ஏஞ்சலின் பிரபா, உடற்கல்வி இயக்குனர் தீனதயாளன் ஆகியர்கள் முழுமையாக செய்திருந்தனர் இறுதியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/