மதுரை சோழவந்தான் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

மதுரை சோழவந்தான் பகுதி பள்ளிகளில் சுதந்திர தின விழா.

மதுரை மாவட்டம், சோழவந்தான்  பகுதியில் அமைந்துள்ள.கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கினார் நிர்வாகி கவுன்சிலர் வள்ளிமயில் முன்னிலை வகித்தார் சோழவந்தான் நகர அரிமா சங்க பள்ளியின்தாளாளர்  கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தேசியகொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். 


முன்னதாக முதல்வர் செல்வம் வரவேற்றார் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி, அனைவருக்கும் கல்வியியக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார்.  



உழவர் உணவகத்தில் சேது தலைமையிலும். சோழவந்தான் நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தனர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரிஷபம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். 


இதேபோல் சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிய இனிப்புகள் வழங்கப்பட்டது தலைவர் டாக்டர் மருது பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வாடிப்பட்டி வட்டார அளவிலான தங்க நகை அடகு கடை உரிமையாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது தலைவர் மருது பாண்டியன் செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் ராஜா என்ற இருளப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


சோழவந்தான் பேரூராட்சியில் சுதந்திர தின விழா

சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார்.துணைத்தலைவர் லதாகண்ணன் இனிப்பு வழங்கினார் வார்டு உறுப்பினர்க ள்,பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/