கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருமங்கலத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
கொடநாடு கொைல மற்றுமு கொள்ளை வழக்குகளில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரியும், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக் காமல் மெத்தனப்போக் கோடு செயல்படும் தி.மு.க.வை கண்டித்தும் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் ராஜாஜி சிலை அருகே ஓ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தெற்கு, மதுரை மாநகர், மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர்கள் ஐயப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அமைப்பு செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம், மேலூர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் பேசுகையில், இங்கே கூடியிருக்கும் நாளை நமது வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டம் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களா கொலை, கொள்ளைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம். கொலையாளியை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறிய உதயகுமார் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வேண்டியதுதானே என்றார். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கும் மரணத்தின் காரணம் தி.மு.க.வும், அரசு போட்ட பொய்யான வழக்கும் தான் என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் அணி என்றும், ஓ.பி.எஸ்சிடம் இருப்பது தொண்டர் அணி என்றும் பேசினார்.
மதுரையை தெற்கு மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் பேசுகையில், எடப்பாடியிடம் தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லும் உதயகுமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடுகிறேன். உசிலம்பட்டியில் யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போமா என்று சவால் விட்டார். இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஓ.பி.எஸ். ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் மேலூர் சரவணன், பேராசிரியர் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோரும் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் மூ.சி.சோ.ரவி திருமங்கலம் நகர செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் கொடிவீரன், துணை செயலாளர் விஐயபாண்டி, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம்ஷா ராஜா, ஆர். சுந்தரம், விமல் ராஜ் ஸ்ரீராம் ரவி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரெங்கராஜ், காளிதாஸ், தனபாண்டி, முனிபாலன் முத்துக்குமார், நாகராஜ், வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக