கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சந்திராயன் மூன்று வெற்றி கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சந்திராயன் மூன்று வெற்றி கொண்டாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிகமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் ரேண்டா் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் வகையில், தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த ஊர்வலம் ஊத்தங்கரை நகரில் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து  தொடங்கி, பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த ஊர்வலத்தின்போது, மாணவர்கள் தங்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர். மேலும், சந்திராயன்-3 விண்கலத்தின் வெற்றிக்கு இந்திய விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஊர்வலத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


மாணவர்கள் கூறியதாவது: "சந்திராயன்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றிக்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு நாங்கள் இந்த ஊர்வலத்தை நடத்தினோம்" என்று மாணவர்கள் கூறினர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/