ஸ்ரீஜிஜி லாஅல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தில் அதர்வண காளிஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மாகவேள்வி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஸ்ரீஜிஜி லாஅல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தில் அதர்வண காளிஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மாகவேள்வி.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே   கைலாசபட்டி  கைலாசநாதர் கோவில் மலை அடிவாரத்தில்   ஸ்ரீஜிஜி லாஅல்சித் பாபாஜி சேவாஸ்ரமத்தில் உலக உயிர்கள் இன்புற்று வாழ, நலம் பெற வேண்டி அதர்வண காளி ஸ்ரீமகா ப்ரத்தியங்கிரா தேவி மகா வேள்வி  ஆக.15 தேதி  துவங்கியது.


இம்மகாவேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதன், அகில பாரத துறவிகள் சங்க தலைவர் ஸ்ரீராமானந்தாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்வேள்வியில்  விக்னேஸ்வர பூஜை, பாபாஜியிடம் அனுமதி பெறுதல், கடஸ்தாபனம், வேதபாராயணம், முதற்கால அதர்வணகாளி மஹா ப்ரத்யங்கிரா ஹோமங்கள் த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. 


அதனை தொடர்ந்து ஆக.16 அதிகாலையில் திருமுறைபாராயணம், சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்று தீபாராதனையும்,   மாலையில் மூன்றாம் கால அதர்வண காளி மஹா ப்ரத்யங்கிரா ஹோமங்கள் நடைபெற்று பின்னர் கடம் புறப்பாடு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர் அப்பாதுரை,  நிர்வாகி முத்துராமன் உள்ளிட்ட ஆசிரம சேவகர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில்  வடலூர் சத்திய சன்மார்க்க ஞானசபை  ஸ்ரீ குரு பக்ரி சுவாமி, சீலையம்பட்டி மாதா பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஞான சரஸ்வதி, வேதபுரி ஸ்ரீ சித்பவானந்த ஆசிரம நிர்வாகிகள், பொள்ளாச்சி புரவிபாளையம் ஸ்ரீ கோடி சித்தர் ஆசிரமம் ஸ்ரீ முத்தானந்தா ஜி  மற்றும் கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/