நீலகிரி மாவட்டம் பந்தலூர் தமிழக எல்லை பகுதியான தாளூர் பகுதியில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் ராசித்கசாலி.கல்லூரி முதல்வர் செந்தில்குமார் கல்லூரியின் மேலாளர் உமர் நீலகிரி கல்லூரி அகடமியின் டீன் மோகன்பாபு மற்றும் கல்லூரி பொறுப்பாசிரியர் கள் கல்லூரியின் அலுவலர்கள். கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டனர். விழாவில் மாணவர்கள் அணிவகுத்து சென்டை மேளம் முழங்க மாவோளி மன்னன் மாணவர்கள் புடைசூழ வந்தனர் .பின்பு மாணவிகள் கேரளா பாரம்பரிய உடை அணிந்து அத்த பூ கோலமிட்டு அதன் பின் கோலத்தை சுற்றி நடனமாடினார்கள்.
அதன் பின் அந்த பூ கோலத்தை நடுவர்கள் பார்வையிட்டு சிறந்த பூ கோலத்திற்கு பரிசு வழங்கப்பட்டது பின்பு கலைநிகழ்ச்சிகள் உரியடித்தல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது .பின்பு கேரளா அறுசுவை உணவுகள் மாணவ மாணவியர்க்கு வழங்கப்பட்டது .....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக