வறுமை கோட்டுக்கு கீழ் எடுக்கும் பட்டியலில் முறைகேடு நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

வறுமை கோட்டுக்கு கீழ் எடுக்கும் பட்டியலில் முறைகேடு நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம்.

நெய்வேலி பெருமத்தூர் ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் எடுக்கும் பட்டியலில் முறைகேடு நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 1-ல் பெருமத்தூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்கள் முன்பு பஞ்சாயத்து மூலம் மகளிர் குழுவினர் அப்பகுதியில் உள்ள மக்களில் வறுமைக்கோட்டு கீழ் உள்ளவர்கள் என 61 பேர் மட்டும் பட்டியல் எடுத்துள்ளனர்.


இந்த பட்டியலில் அவர்களுக்கு சொந்தமானவர்களே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என சேர்த்துள்ளதாகவும், அவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலைத்திட்டம் வழங்குவதாக கூறியும், அப்பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர் ஆகையால் முறையான வறுமை கோட்டு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பெருமத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தை இரவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/