திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று க்கொண்டிருந்தார். கூட்டஅரங்கில் கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஊன்றுகோலுடன் வந்து மனு கொடுக்க நின்று கொண்டிருந்தார் இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்கள் அந்த பெண்ணிடம் சென்று மனுவை வாங்கினார்.
ஆட்சியரிடம் அந்தப் பெண் தான் படித்திருப்பதாகவும் தனக்கு வேலை வேண்டும் என்றும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அழுது கொண்டே கூறினார். இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணுக்குஆறுதல் கூறினார் அவருடைய ஆவணங்களை பார்த்து ஆய்வு செய்து கோரிக்கை மனுவை படித்து பின்னர் அதிகாரிகளை அழைத்து அந்த பெண்ணிற்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் உடல் பாதித்த நிலையிலும் நன்றாக படித்து உள்ளதை பாராட்டினார் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்கள் உறுதி கூறினார்.
- மாவட்டசெய்தியாளர் அ.காஜாமைதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக