தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்  ஒன்றியத்திற்கு உட்பட்ட  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் 61வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணல் அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் கொடி ஏற்றியும் மரியாதை செலுத்தி விட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 


இந்நிகழ்வில் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் வீர.விடுதலை செல்வன், மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல், தொகுதி துணை செயலாளர் பகலவன், ஒன்றியச் செயலாளர் சிவா, நகரச் செயலாளர் சௌ.சத்யதாஸ், நகர நிர்வாகிகள் மைக்கேல்,  சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


- திருக்கோவிலூர் தாலுகா செய்தியாளர் ப.பாலமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/