கோத்தகிரியில் குடிநீர் பிரச்சினை காவல்துறையில் புகார்... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கோத்தகிரியில் குடிநீர் பிரச்சினை காவல்துறையில் புகார்...


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஊரில் கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக  ஹதுவுகல் எனுமிடத்திலிருந்து மின்சாரம் மற்றும் மோட்டார் தேவையின்றி குழாய் மூலமாக வந்து கொண்டிருந்த குடிநீர் கடந்த 7 ஆண்டுகளாக வராமல் இருந்ததை பல முறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவு கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கை  கண்டித்து  கன்னேரிமுக்கு சல்லிவன் பூங்கா முன்பு  8.8.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்கக்கோரி கோத்தகிரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு. யாதவகிருஷ்ணன் அவர்களிடம்  மனு அளிக்கப்பட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த கோத்தகிரி காவல்  ஆய்வாளர் திரு.வேல்முருகன் அவர்கள் உதவி ஆய்வாளர்கள் திரு.ரமேஷ் அவர்கள் மற்றும் திரு.யாதவகிருஷ்ணன் அவர்கள் இரவு 8 மணிக்கு நேரடியாக கன்னேரிமுக்கு ஊருக்கு வந்து குடிநீர் வரும் இடத்தை பார்வையிட்டதுடன். கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி  செயல் அலுவலர் திரு. மணிகண்டன்  அவர்களிடம் தொலைபேசியில் பேசி மற்றும் ஊர்தலைவர் ஹாலாகவுடர் மற்றும் ஊர்பொதுமக்களிடம் கலந்துறையாடி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

குடிநீர் பிரச்னையை தீர்த்துவைக்க இரவென்றும் பாராமல் உடனடியாக களமிறங்கிய  கோத்தகிரி காவல்துறையின் நற்செயலுக்கும் ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்களுக்கும் உதவி ஆய்வாளர் திரு. யாதவகிருஷ்ணன் அவர்களுக்கும் உதவி ஆய்வாளர்  திரு. ரமேஷ் அவர்களுக்கும்  கன்னேரிமுக்கு ஊர் மக்கள் நன்றிதெரிவித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/