வேலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொது மக்கள் கொந்தளிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொது மக்கள் கொந்தளிப்பு.

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொது மக்கள் கொந்தளிப்பு.



வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
 

ஆக்கிரமிப்புகளை அகற்ற
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்து வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.



இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சிலர் பிரச்சனைகள் ஈடுபட்டதால் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நாளைக்குள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஜேசிபி பொக்லைன் பல இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.




வேலூர் தாலுகா செய்தியாளர்
 மு. இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/