புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, திருக்களம்பூர் மதகடி கருப்பர் ஆடி பொங்கல் விழாவில் மாதகடி கருப்பர் சாமியாடி, வீரபத்திரர் சாமியாடி, சின்ன கருப்புசாமியாடி, செங்கிடாய்கருப்பர் சாமியாடி உள்ளிட்ட சாமியாடிகள். சாமியாடி ஊரை வலம் வந்தனர், அதைத்தொடர்ந்து, கதலிவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து தெருவாசக்கூடம் என்று சொல்லக்கூடிய இடம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம். பக்தர்கள் தங்கள் கரங்களில் அருவாள் பிடித்துக் கொள்ள. மதகடி கருப்பர் சாமி ஆடிய சாமியாடி. அந்த அருவாக்கள் மீது ஏறி நடந்து வருகிற காட்சி பக்தர்கள் மத்தியில் திகில் ஊட்டும் வகையில் அமைந்திருந்தது. இதில் கிராமப் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டு. சாமியை. வணங்கி மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து கிராமத்து பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு ,கோழி ஆகியவற்றையும் நேர்த்திக்கடனாக வெட்டி பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
-எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக