சிவகங்கை மாவட்டத்தில் கையை முறித்த அக்காவின் கணவர், குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தீத்தான்பேட்டை கிராத்தை சேர்ந்தவர் திரு பார்த்தசராதி (சென்ரிங் கான்ராக்டர்). இவருடைய மனைவியின் பெயர் திருமதி சேதுமணி இல்லத்தரசி. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்ததன் காரணமாக மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். முடிவாக இருவரும் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் தனித்தனியாக வாழ்ந்துகொள்வதாக தெரிவித்து பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் சேதுமணியின் பராமரிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பார்த்தசாரதி தன் குழந்தைகளை பார்க்கும் ஏக்கத்தில் அவருடைய மணைவி மற்றும் குழந்தைகளை பார்த்து பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சேதுமணியின் அக்கா கவிதா என்பவர் பார்த்தசாரதியை தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க பாய்ந்தது மட்டுமல்லாமல் உடனடியாக தன்னுடைய அக்கா மேனகாவின் கணவர் தேவதாஸை (ஆசிரியர்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அடியாட்களோடு வரும்படி கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேவதாஸ் பார்த்தசாரதியை கொச்சையான வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டு மல்லுக்கட்டியுள்ளார். இதற்கிடையில் வாக்குவாதம் முற்றவே தேவதாஸ் பார்த்தசாரதியை கொலைவெறியுடன் இரண்டு கைகளையும் மம்பட்டியால் பலமாக தாக்கியதில் கைகள் இரண்டிலும் எலும்புகள் முறிந்து உடைபட்டுவிட்டது. உடனடியாக அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பார்த்தசாரதியை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் பார்த்தசாரதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், எனக்கும் என் மனைவிக்கும் மனஸ்தாபம் காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் என் குழந்தைகளை என் மனைவியின் அனுமதியுடன் பார்க்க சென்றேன். நான் அங்கே எந்த பிரச்சனையிலும் ஈடுபடவில்லை அங்கே வந்த என் மனைவியின் அக்கா கவிதா என்னை தகாத வார்த்தையில் பேசியதோடு மட்டுமல்லாமல் அருகில் கிடந்த செங்கலை எடுத்து என் மர்ம உறுப்பில் தாக்கினார். பிரச்சனை பெரிதாவதை அறிந்த நான் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் நான் சென்றுவிடுகிறேன் என முயன்ற போது அவர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு தன் அக்கா மேனகாவின் கணவர் தேவதாஸை தொலைபேசியில் அழைத்து வீட்டிற்கு வரும்படி கூறி இருவரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள். அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்னை தாக்குவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. கணவன் மனைவிக்குள் நடந்த குடும்ப பிரச்சினையில் இவர்கள் தலையிட்டு மேலும் பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகின்றனர். நான் உயிரோடு இருக்கவே கூடாது என்ற எண்ணத்தில் கொலை வெறியுடன் என்னை தாக்கியுள்ளனர். தனி ஆளாக என்னால் அவர்களை தடுக்க முடியவில்லை.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி என்னை தாக்கி இந்த நிலைமைக்கு ஆளாக்கி என் மனைவியின் அக்கா கவிதா மற்றும் மற்றொரு அக்காளின் கணவர் தேவதாஸ் ஆகிய இருவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் என் உயிருக்கு அவர்களால் அச்சுறுத்தல் உள்ளது என மண்றாடி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றார் கண்ணீர் மல்க. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக