மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ஒவ்வொரு தொகுதிகளும் உள்ள கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை எடப்பாடியார் கௌரவிக்கிறார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ஒவ்வொரு தொகுதிகளும் உள்ள கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை எடப்பாடியார் கௌரவிக்கிறார், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் கழக அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானின் நடைபெற்றது.


இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் லோகவை ஒட்டி, மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பி.சரவணன், கே.தமிழரசன், எஸ் எஸ்.சரவணன், எம்.வி. கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன், வெற்றிவேல், மற்றும் ஒத்தக்கடை சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, எடப்பாடியார் தலைமையில், மாநாட்டிற்காக பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி கழக அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ஏறத்தாழ 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ என்ற நினைத்தபோது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கௌரவிக்கிறார்.


முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யைத் தவிர மற்றதை பேச மாட்டேன் என்று சத்திய பிரமாணம் எடுத்தது போல் பேசி வருகிறார். தமிழ்நாட்டைப் பாருங்கள் என்று கூறினால், நான் மணிப்பூர், ஜப்பான், மேற்கு வங்காளத்தை பார்க்கிறேன் என்று கூறுகிறார். அதனால், இந்த அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் .இன்றைக்கு 25 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்று விட்டது. இந்த அரசு ஊழல் கறை படிந்த அரசாக உள்ளது. இந்த அரசால் நாள்தோறும் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். நிர்வாகம் எல்லாம் முடங்கி போய் உள்ளது.


ஒன்று மட்டும் ஸ்டாலின் செய்கிறார் அப்பாவின் புகழ் மட்டும் பாடுகிறார். கருணாநிதி பெயரில் நூலகம், பேனா, ஸ்டேடியம் என்று கருணாநிதி பெயரிவ் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இனி வீட்டுக்கு, வீடு கருணாநிதி பேர் வைக்க வேண்டும் என்று கூட சட்டம் போட்டு விடுவார், கடந்த 10 ஆண்டுகளில் மறந்து போன கருணாநிதியை, திரும்பும் தனது அதிகாரத்தால் நினைவூட்ட பார்க்கிறார்.


இன்றைக்கு விலைவாசியை உயர்வு எல்லாம் கின்னஸ் சாதனை படைத்து விட்டது. தமிழகம் இருள் சூழ்ந்து உள்ளது. இருள் சூழ்ந்த தமிழகத்தை எடப்பாடியரால் தான் காப்பாற்ற முடியும் என்று மக்கள் எண்ணி வருகின்றனர். இன்றைக்கு நூறு நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார். உலக அளவில் ஏழாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் கொண்ட கட்சியாகவும், தமிழகத்தில் அதிமுகவை முதல் இடத்திற்கு எடப்பாடியார் கொண்டு சென்று  சாதனை படைத்துள்ளார்.


இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி விட்டு, எடப்பாடியாரை மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக்க இந்த மாநாடு கால்கோள் விழாவாக அமையும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/