காட்பாடி திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து பறையுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

காட்பாடி திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து பறையுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

.com/img/a/

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளாக ஆசிரியர், அலுவலர் மாணவர் விரோதப் போக்கு சாதிய வன்மங்களின் உறைவிடம் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட கோரியும்  பறையுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்கலைகழகம் எதிரே இன்று காலை 9.30 முதல் 12.20 வரை நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளுவர் பல்கலைகழக தொழிலாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் பேராசிரியர் அய்.இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சு.குமார், அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் இல.பிரதாபன், பல்கலைகழக ஆசிரியர் சங்க முன்னாள் துணைத்தலைவர் சுரேஷ்மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.


.com/img/a/

பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் மண்டலத்தலைவர் ஆசிப், செயலாளர் அந்தோனி பாஸ்கரன் மாவட்ட தலைவர் பார்த்திபராஜா, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வாரா, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சி.சேகர், உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஷாநவாஷ், முதுகலை ஆசிரியர் கழக  மாவட்ட செயலாளர் ஆர்.அஜீஸ்குமார், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, நிலவு குப்புசாமி, செ.சரவணன், வங்கி ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் சிவராமன் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப், எஸ்டிபிஐ  செயற்குழு உறுப்பினர் பயாஸ் , தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட செயலாளர் வி.கு.பேந்திரன், வழக்கறிஞர் சந்துரு சேலம் பெரியார் பல்கலை கழக தொழிலாளர்கள் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.


இந்த போராட்டத்தின் போது தலைமை தாங்கிய பேராசிரியர் அய்.இளங்கோவன் மயக்கநிலை அடைந்தார் பின்னர் சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பி மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
 
கோரிக்கைகள் 

  1. மாண்புறு முத்தமிழ் அறிஞர் முதல்வர் டாக்டர் கலைஞர் கொடுத்த தொழிலாளர் பணிநிரந்தரப் படுத்துதல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற கோருதல்
  2. பேரறிவாளர் டாக்டர் அம்பேத்கர் படிப்பியல் துறையைத் தொடங்குதல்.
  3. பேரறிவாளர் டாக்டர் அம்பேத்கர் இருக்கையை உருவாக்குதல்
  4. முரசொலியில் சொல்லியுள்ள ரூபாய் 255 கோடி ஊழல் குறித்து நேரடியாக நடுநிலை வழுவாமல் விசாரித்தல், நடவடிக்கை மேற்கொள்ளல், தீக்கதிரில் சொல்லப்பட்ட சங்கதியை விசாரித்தல் நடைவடிக்கை மேற்கொள்ள கோருதல்
  5. உயர்நீதிமன்றத்தில் தொடப்பட்ட பொதுநல வழக்கின் விளைவாக திரு.இளங்கோ ஹென்றிதாஸ் குழு புகார்தாரர் உட்பட அனைவரையும் விசாரித்து அறிக்கையை சமர்பிக்க உத்திரவிட கோருதல்

- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad