விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி ஆலோசனை:
மதுரை அருகே, சோழவந்தானில், விநாயகர் சதுர்த்தி தொடர்பான இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை புறநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், இந்து முன்னணி முழு நேர ஊழியர் வேல்முருகன், முன்னிலை வகித்தனர்.
விநாயகர் சதுர்த்தியில் எங்கு சிலை வைப்பது, எவ்வாறு காவல்துறையில் அனுமதி பெறுவது, ஊர்வலம் நடத்துவது எப்படி உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ,இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக