வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI கூட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்தது. CMC வேலூர் மற்றும் IIT மெட்ராஸ் ஆகியவை கூட்டு ஆராய்ச்சி, கொள்கை (MOU) மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்த முன்வந்துள்ளது.
இரண்டு நிறுவனங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் வளமான வரலாற்றைக் கொண்ட நிறுவனங்களாகும். அதிநவீன முறைகளை கொண்டு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மருத்துவ நிறுவனங்களின் 2023 NIRF மதிப்பீட்டில் 3 வது இடத்தைப் பெற்றுள்ள CMC, அடிப்படை அறிவியல், மருத்துவம், பொது சுகாதாரம், ஸ்டெம் செல், கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிரியல் உள்ளிட்ட பல கிளைகளில் அதிநவீன ஆராய்ச்சிகளை ஏற்கனவே நடத்தி வருகிறது.
1959ல் நிறுவபட்ட IIT மெட்ராஸ் பொறியியல் ரீதியல் பல ஆண்டுகளாக மாபெறும் சாதனைகளில் ஈடுபட்டுள்ளது. 18 நாடுகளிலிருந்து 9500 மானவர்களை கொண்டு செயல்படும் IIT மெட்ராஸ் , 600 ஆசிரியர்களை கொண்டு 17 துறைகளாக இயங்குகிறது. இந்த கூட்டத்தில் உறையாற்றுபவர் CMC இணை இயக்குநர் டாக்டர் ஜாய் அம்மன் மற்றும் மருத்துவர்கள் பலரும் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக