அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் வில்லாபுரம் மீனாட்சி நகர் முனியாண்டி கோவில் பின்புறம் சென்றபோது அந்த பகுதியில் கும்பலொன்று பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார்.பிடிபட்ட வர்களிடம் விசாரணை செய்தபோது சோலையழகுபுரம் மூன்றாவது தெரு குமார் மகன் வெங்கடேஷ் 24, சிந்தாமணி ராஜம்மான் நகர் ரத்னவேல் மகன் காளீஸ்வரன் 29, வைகை வடகரை ஆழ்வார்புரம் முருகேசன் மகன் சிவகுமார்30, ராஜமான்நகர் சிந்தாமணி மெயின் ரோடு கணேசன் மகன் சரவணன் 22, ராஜம்மான் நகர் முத்துமகன் கண்ணா ராஜபாண்டி 27 என்று தெரிய வந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர் .அவர்களிடம் இருந்து சூதாடிய சீட்டு கட்டுகளையும் பணம் ரூபாய் 1170ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கே புதூரில் முன்விரோதத்தில் வாலிபரை பைக்கில் கடத்தி தாக்குதல் மூன்று பேர் கைது.
கே புதூரில் முன் விரோதத்தில் வாலிபரை பைக்கில் கடத்திச்சென்று தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர், ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் தனசேகரன் மகன் முத்துக்குமார் 32 .இவரும் அப்பன் திருப்பதி தங்க பிரகாஷ் இருவரும் கட்டிடங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் சம்பவத்தன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை பைக்கில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய சகோதரர் குமரன் சேதுபதி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் கடத்தப்பட்ட வாலிபர் முத்துக்குமாரை மீட்டனர். அவரை கடத்திச் சென்ற அப்பன் திருப்பதி தங்க பிரகாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே புதூர் முன்னமலை, எஸ் கொடிக்குளம் ராமர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
தோல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது நிச்சயம் அதை வென்று விடலாம்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கூட்டத்தில் டிஐஜி பொன்னி பேச்சு, தோல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைக் கண்டு பயப்பட வேண்டாம் வென்று விடலாம் என்று தமிழ்நாடு தொழில் சார்ந்த வர்த்தக சங்க செயற்குழு கூட்டத்தில் போலீஸ் டிஐஜி பொன்னி பேசினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது .தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக டிஐஜி பொன்னி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர்பேசியதாவது .வியாபாரிகளும் தனியாக தொழில் செய்பவர்களும்தான் ராஜா போன்றவர்கள். அவர்கள் நினைத்ததை செயல்படுத்தி விடலாம்.நாம் படிக்கும் காலத்தில் இருந்து தோல்விகளை சந்தித்து இருப்போம்.பின்னர் அந்த தோல்வியை வென்றிருப்போம். தோல்வி என்பது எல்லோருக்கும் வரும். தோல்வியை கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை .ஆனால் நிச்சயமாக அனைவரும் வெற்றி பெற்று இருக்கிறோம். தோல்வியை கண்டு கொள்ளாமல் இருப்பதே மிகவும் சிறந்தது. அது எல்லோருக்கும் பொதுவானது. அதை நிச்சயம் வென்று விடுவோம். அதிகாரிகளும் வியாபாரிகளும் சமூகத்திற்கு சர்வீஸ் செய்கிறோம். நாம் சம்பாதித்ததை நாம் வைத்துக் கொள்ளாமல் சொசைட்டிக்கு தருபவர்களே கடவுள் போன்றவர்கள் இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக