விடுமுறை என்ற பேரில் வேலையாட்களை பணிநீக்கம் செய்த கோரா ஷீஸ் கம்பெனி அதிர்ச்சியில் பணியாளர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

விடுமுறை என்ற பேரில் வேலையாட்களை பணிநீக்கம் செய்த கோரா ஷீஸ் கம்பெனி அதிர்ச்சியில் பணியாளர்கள்.

AVvXsEhGzC3spiVEg6PI8TSew5E9HaLB-split

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் கோரா ஷூஸ்  தோல் பதனிடு தொழிற்சாலை  செயல்பட்டு வருகிறது  இந்த கம்பெனி கடந்த 2022 ஆம் ஆண்டு  துவங்கப்பட்டது இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து   வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மாதம் கடந்த 13ஆம் தேதியன்று  கம்பெனியில் வேலை தட்டுப்பாடு இருக்கிறது  எனவே வேலை செய்யும் பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்து அதன் பிறகு மீண்டும் வேலைக்கு அழைப்பதாக  கம்பெனி நிர்வாகம் அறிவித்ததாக சொல்லப்படுகிறது  ஒவ்வொரு மாதமும் சம்பளம் 10 அல்லது 11ஆம் தேதி தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.


ஆனால் தற்போது இந்த  மாதம் முடியாமலேயே 21 ஆம் தேதியே சம்பளம் அவரவர்கள் வங்கி கணக்கில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது இதனால் அதிர்ச்சியான பணியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி கம்பெனி முன்பாக திரண்டனர், மேனேஜரிடம் இது குறித்து பணியாளர்கள் கேட்டபோது இனிமேல் உங்களுக்கு வேலை கிடையாது  நீங்கள்  வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாகச் சொன்னதாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து பணியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது  இரண்டு வருடமாக கோரா ஷூஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறோம் கம்பெனியில் எங்களுக்கு முறையாக சம்பளம் இல்லை  சம்பளத்திக்குரிய ரசித்து வழங்கவில்லை   மேலும்  மேனேஜர், சூப்பர்வைசர் இருவரும்  பெண்களாகிய நாங்கள் கழிவறைக்கு சென்று வருகிற போது தரை குறைவாக பேசுவது பின்னாடியே ஆட்களை அனுப்பி அழைத்து வருவது மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி வந்தனர். 

AVvXsEhGzC3spiVEg6PI8TSew5E9HaLB-split%20(1)


வேலை செய்து பிழைக்க வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதாக கூறுகின்றனர், மேலும் எந்த ஒரு முன்னறிவிப்பு செய்யாமலேயே விடுமுறை என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்பி விட்டு நாங்கள் வேலை  செய்த பத்து நாள் சம்பளத்தை மாதம் முடிவதற்கு முன்பாக வங்கி கணக்கில்  போட்டு விட்டனர் கம்பெனிக்கு நேரில்  வந்து கேட்டபோது உங்களுக்கு வேலை கிடையாது என்றும்  உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மேனேஜர் பேசினார் என்றனர். 


இதனால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம் வேலையை நம்பி தான் நாங்கள் சீட்டு கட்டி வருகிறோம் வீட்டு வாடகை பிள்ளைகளுக்கு படிப்புக்குரிய பண தேவைகளை சந்தித்து வந்தோம் திடீரென்று வேலையை நிறுத்தி வீட்டிற்கு அனுப்புவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.


சம்பவம் அறிந்த  ராணிப்பேட்டை நகர காவல் நிலைய  போலீசார்  ஆய்வாளர் பார்த்தசாரதி பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி  முறையாக  லேபர் ஆபீஸில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுங்க  என்று சொல்லி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார் அதனைத் தொடர்ந்து கம்பெனி நிர்வாகம் பணியாளர்களுடன் பேசி வருகின்ற 30ஆம் தேதி இரண்டு மாத சம்பளம் மற்றும் 8 மாத போனஸ் வழங்குவதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad