நீதிமன்ற உத்தரவை மீறி இழப்பீட்டுதொகை வழங்காத அரசு பேருந்து ஜப்தி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

நீதிமன்ற உத்தரவை மீறி இழப்பீட்டுதொகை வழங்காத அரசு பேருந்து ஜப்தி.

.com/img/a/

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை  பாவேடுந்த் தோப்பு பகுதி சேர்ந்த குமரன் தெரு கூலி தொழிலாளி கார்த்திக்  (31) தந்தை பெயர் சண்முகம் என்பவர் பணி சம்பந்தமாக கடந்த (2013)ம் ஆண்டு குடியாத்தம் புதிய பஸ் நிலையம் வந்தார் அப்போது எதிர்பாராத விதமாக நகரப் பேருந்து (வழித்தடம் 9)- கூலி தொழிலாளி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.


இது சம்பந்தமாக (2016 )ம் ஆண்டு குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார், இதை விசாரணை செய்த சார்பு நீதிபதி பிரபாகரன்அவர்கள் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி கார்த்திக் என்பவருக்கு அரசு போக்குவரத்து துறை ₹ 7 லட்சத்து 77 890 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

.com/img/a/

இந்த உத்தரவை போக்குவரத்து துறை அமல்படுத்தவில்லை  அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இன்று  1.8.2023 பிற்பகலில் புதிய பஸ் நிலையத்தில் நகரப் பேருந்தை நீதிபதி உத்தரவை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் பேருந்து ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.



குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad