நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையின் சார்பில் போக்குவரத்து விதிமீறலுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகைக்கான தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையின் சார்பில் போக்குவரத்து விதிமீறலுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகைக்கான தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது

IMG-20230826-WA0029

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையின் சார்பில் போக்குவரத்து விதிமீறலுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகைக்கான தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து அபராதத் தொகை பல மடங்கு  உயர்ந்த பிறகு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது தற்போது கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையின் சார்பில் நகரின் மையப்பகுதியான காமராஜர் சிலை அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது


அறிவிப்பு பலகையில் உள்ளது போக சீட் பெல்ட் அணியாதது 1000, இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர் தலை கவசம் அணியவில்லை எனில் 1000, ரியர் வியூ மிரர் இல்லையெனில் 1000 போன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.


ஆகவே பொதுமக்கள் அபராதம் செலுத்துவதைவிட விதியை கடைபிடிப்பது செலவு குறைவு என்பதை கருத்தில் கொண்டு  கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையினர் பல முறை தலை கவசம் உயிர் கவசம் என்று விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்ப பாதுகாப்பாக பயணிக்குமாறு தமிழக குரல் இணையதள செய்தி நிறுவணத்தின் சார்பிலும் நீலகிரி மாவட்ட செய்திப் பிரிவு சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad