மதுரை தனக்கன்குளம் பகுதியில் வாலிபர் வெட்டி கொலை; போலீசார் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

மதுரை தனக்கன்குளம் பகுதியில் வாலிபர் வெட்டி கொலை; போலீசார் விசாரணை.

.com/img/a/

மதுரை தோப்பூர் அருகே மூணாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 24) தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனி ஐயங்கார் பேக்கரி அருகே உள்ள பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். 


இது குறித்த தகவல் அறிந்து வந்த திருநகர் காவல் துறையினர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. போலீஸ்காரின் முதல் கட்ட விசாரணையில் 3 அடி பெட்டியை சேர்ந்த வசந்த் மற்றும் அவரது உறவினர்கள் வினோத் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் பெங்களூர் ஐயங்கார் பேக்கரி அருகே வரும்போது கூத்தியார் கொண்டை சேர்ந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் மூவரையும் சுற்றி வளைத்து வெட்டியது.


இதில் ஒருவர் தப்பி ஓடினார் வசந்தவசந்தகுமார் சம்பவ இடத்திலே பலியானார். வினோத்திற்கு வலது கையில் வெட்டு விழுந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கரடிக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன் விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வசந்தகுமார் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறையில் இருந்துள்ளார் . 


கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியான வசந்தகுமார் கோவையில் வேலை பார்த்து வந்துள்ளார் குடும்பத்தினருடன் கோவிலுக்கு செல்வதற்காக நான்கு நாட்களுக்கு முன் மதுரை வந்த வசந்தகுமார் நண்பர்களுடன் தனக்கன்குளம் பகுதியில் மது அருந்து செல்லும்போது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வசந்த் குமார் மற்றும் நண்பர்களை வெட்டி கொலை செய்ய முயன்றனர் இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad