சாலையை ஆக்கிரமித்திருக்கும் கடைகளால் விபத்து, போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

சாலையை ஆக்கிரமித்திருக்கும் கடைகளால் விபத்து, போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

.com/img/a/

வாலாஜா அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் அருகில்  சாலையை ஆக்கிரமித்திருக்கும் கடைகளால் விபத்து, போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை...



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து ராணிப்பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அரசு தலைமை  மருத்துவமனை,  எஸ்பிஐ வங்கி மற்றும் பேருந்து நிலையம்  செயல்பட்டு வருகின்றன  இரவு பகல் பாராமல் பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் எஸ்பிஐ வங்கிக்கு  வந்து செல்கின்றனர் இந்த நிலையில் மருத்துவமனை மற்றும் வங்கிக்கு அருகில்  சிறு குறு வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து  நான்கு சக்கர வாகனங்களில் காய்கறி மற்றும் சிற்றுண்டி கடைகள்
வைத்து வியாபாரம் செய்து வருவதால்,கடைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைத்து செல்கின்றனர் இதனால் சாலை குறுகி போக்குவரத்திற்க்கு நெரிசல் ஏற்படுகின்றது அருகில் பேருந்து நிலையம் இருப்பதால்  எப்பொழுதும் கூட்ட‌‌ நெரிசலுடன் காணப்படுகின்றன வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்  மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன சாலையோரங்களில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து கொள்ள நகராட்சி  நிர்வாகம் அனுமதித்து வரி வசூல் செய்து வருவதால் பொதுமக்கள் அனுதினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வரும் கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைத்து வாகன ஓட்டுக்கள் விபத்தில்லா பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர் நடவடிக்கை எடுக்குமா? நகராட்சி நிர்வாகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad