தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாடு ஊரை சேர்ந்த பிச்சையாபிள்ளை மகன் சுடலை லாரி டிரைவர். இவர் நேற்று பழங்குளம் கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டு சாமிதோப்பில் இருந்து சாலைப்புதூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது லாரியின் பின்னால் நெல்லை மாவட்டம் உவரி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் விவசாயியான லிங்கேஸ்வரன் (46) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது லிங்கேஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார்.
காற்றின் இழுவிசை காரணமாக நிலை தடுமாறிய அவர் தனது இரு சக்கர வாகனம், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்வாறு காவல் துறையின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக