இருக்கு ! ஆனா இல்லை !! திருப்பூர் வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் மிஷின் இருக்கு! ஆனால் குடிநீர் இல்லை ! மக்கள் தாகம் தீர்க்க தாசில்தார் மனசு வைப்பாரா? திருப்பூர் வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய தேவைகளான சான்றிதழ்களை பெறுவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாசில்தார் அறைக்கு அருகில் பொதுமக்கள் அமரும் இருக்கைக்கு முன்புறம் உள்ள குளிரூட்டும் வசதி கூடிய குடிநீர் இயந்திரம் பயன்படுத்தாத குடிநீர் இல்லாத நிலையில் துருப்பிடித்து வருட கணக்கில் உள்ளது. இதை கடந்து தான் தாசில்தார் தனது அறைக்கு செல்வார்! வருவார்!! இரண்டு மூன்று தாசில்தார்கள் மாறிய பின்பும் இந்த காட்சி மாறவில்லை. மக்களுக்கு குடிநீர் இல்லை. இந்த இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என்பதே வடக்கு தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களின் வேண்டுகோள் ஆகும்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக