சத்திய ஜீவன் தொழு நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் புது வாழ்வு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

சத்திய ஜீவன் தொழு நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் புது வாழ்வு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சத்திய ஜீவன் தொழுநோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை PHCM விருதை காந்தி வழக்கறிஞர் தலைமை நீதிமன்றம் சென்னை வரவேற்புரை, எஸ் ஜெயகுமார் சத்ய ஜீவன் ஒருங்கிணைப்பாளர் துவக்க உரை சத்தியஜீவன் மற்றும் தொழு நோயாளிகள் புது வாழ்வு நல சங்கத் தலைவர் எஸ் சி டி ராஜன் வாழ்த்துறையாளர்கள் எம் ஜீவா பீடி தொழிற்சங்கம், ஆர் அசோகன் அரசு போக்குவரத்து கழகத் தொழிலாளர் சம்மேளம், சி கருணாநிதி, உமாராணி, ஆர் லோகநாதன், டிஎன் கார்த்திகேயன், எஸ் ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


11/11/2020 அன்று மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வருட கணக்கில் பறித்து வருகின்ற அவநிலையை கண்டித்தும் சொந்த வீடு நிலம் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் 100 நபர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க ஆணை பிறப்பித்தார்கள் மேலும் தலைமை நீதிமன்றம் மீண்டும் 19/8/2021ல் மாற்றுத்திறனாளிகள் சுமார் 100 நபர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க ஆணை பிறப்பித்தோம் நான்கு வார காலங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை குறிப்பிட்டு இருந்தது.


நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை அறிந்த வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் அவர்கள் ரயில் நிலையம் எம்ஜிஆர் நகர் பார்வதியாபுரத்தில் உள்ள நிலத்தை ஆய்வு செய்தார் பிறகு ஆர்ப்பாட்டம் நடந்த பந்தலுக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நல சங்கத் தலைவர் எஸ் சி டி ராஜன் அவர்களை சந்தித்து தாங்கள் கோரும் இடத்தில் பட்டா வழங்க உயர் அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க ஏற்பாடு செய்கிறோம். என்று கூறி உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.


இதில் பி எச் அனுமந்து சங்கரன் கோபி உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆண் பெண் மாற்றித் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.



- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/