திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனை அடித்து, கிள்ளி வைத்த ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுப்பாடம் செய்யாத பள்ளி மாணவனை அடித்து, கிள்ளி வைத்த ஆசிரியை மீது பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்

.com/img/a/

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாலிசெட்டிபட்டியை சேர்ந்த மாயவன் மகன் கௌதம். இந்த சிறுவன் பிலாத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று கௌதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியை சாந்தி என்பவர் கௌதமை பிரம்பால் அடித்து, நகத்தால் கிள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவனின் உடலில் ரத்த காயங்கள் மற்றும் ஊமை காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாலை வீடு சென்ற மாணவனுக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து பெற்றோர் அவனிடம் விசாரித்தபோது, தன்னை ஆசிரியை அடித்து கிள்ளி வைத்ததை கூறியுள்ளான். அதன் பின்னர் கௌதமின் பெற்றோர் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் ஆசிரியை சாந்தி பள்ளியில் படிக்கும் வேறு சில மாணவர்களையும் அடித்து, கிள்ளியதாக மாணவரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.


எனவே கௌதமை தாக்கிய ஆசிரியை சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட ஒளி பதிவாளர் வேடசந்தூர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad