திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மண்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணி சாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தல், தேர் இழுத்தல், அலகு குத்துதல் போன்ற நேத்தி கடன்கள் செலுத்தினார்கள்.
பின்னர் மலையை சுற்றி வந்து, மலையின் மேல் ஏறி வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஆலயத்தின் நுழைவு வாயிலில் உண்டியல் அமைக்கபட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது எனவும் இது குறித்து கோவில் அறங்காவலரிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் கோவில் நிர்வாகத்தின் பேரில் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக