நீலகிரி மாவட்டத்தில் மகத்தான வாழ்வளித்து மறக்க முடியாத அளவிற்கு பலரை வாழ்வித்து மகிழ்வித்த இடம் இன்று மாறாவடுவாய் மாறி உள்ளது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் மகத்தான வாழ்வளித்து மறக்க முடியாத அளவிற்கு பலரை வாழ்வித்து மகிழ்வித்த இடம் இன்று மாறாவடுவாய் மாறி உள்ளது

 


மகத்தான வாழ்வளித்து மறக்க முடியாத அளவிற்கு  பலரை வாழ்வித்து மகிழ்வித்த இடம் இன்று மாறாவடுவாய் மாறி உள்ளது 

ஊட்டி நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள வனப்பகுதியில் 320 ஏக்கர் பரப்பளவை குத்தகைக்குப் பெற்று 1960-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை ஹெச்.பி.எஃப் எனப்படும் மத்திய அரசின் கச்சா பிலிம் தொழிற்சாலை. பல்வேறு கட்டுமான வசதிகளுடன் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இது, தெற்காசியாவின் புகழ்பெற்ற போட்டோ ஃபிலிம் தொழிற்சாலையாகக் கொடிகட்டிப் பறந்தது



இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் , நீலகிரி மாவட்டத்திலுல் இருந்த ஒரே  பொதுத் துறை நிறுவனமும், தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே பிலிம் தொழிற்சாலையும் இதுவாகும் 


1960ம் ஆண்டு உதகையில் உதயமான இந்நிறுவனம் 1967ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொழிற்சாலையின் முதல் உற்பத்தி துவங்கிவைக்கப்பட்டது.


 இதில், 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர்.


 ஆலையை விரிவுப்படுத்த எண்ணிய ஒன்றிய அரசு 500 கோடி ரூபாயில் புதிய எக்சு-கதிர் தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்து, மேலும் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது


உதகைமண்டலத்தின் இந்து நகரில் 500 கோடிகள் செலவில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை விரிவுபடுத்தியது.


இந்த தொழிற்சாலையால் உதகை நகரமே வளமான நகரமாக மாறி வந்தது மார்கெட் வியாபாரம் முதல் ஜவுளி வியாபாரம் என அனைத்தும் இந்த தொழிற்சாலையின் வெற்றி நடையால் வளமடைந்து வந்தது



பலரின் தவறான நடவடிக்கைகளால் பலரின் சுய நலன்களாலும் நவின தொழில் நுட்பத்தாலும்  மெல்ல மெல்ல தன் சிறப்பை வெற்றி நடையை இழந்தது 



2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியக் கூட்டத்தில், இந்த ஆலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கவும், அதற்காக 2007-ஆம் ஆண்டின் ஊதிய மறுசீரமைப்பின்படி இத் தொகை வழங்கப்படுமெனவும், இதற்கான இறுதி அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது


 விருப்பு ஓய்வு திட்டத்துக்கு நிதி 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதல் , ஆலை மூடப்படுவது உறுதியானது



தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவெடுத்தது. படிப்படியாக ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில் கடைசியாக 165 ஊழியர்கள் பணியில் இருந்த நிலையில, ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக மத்திய அரசு ஏப்பல் 2018ல்  அறிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது



மகத்தான வாழ்வளித்து மறக்க முடியாத அளவிற்கு  பலரை வாழ்வித்து மகிழ்வித்த இடம் முடிவில் மூடப்பட்டுவி்ட்டது இன்று இதன் சுவடுகள் மாறாவடுவாய்  மாறி  உள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/