வேலூர் மாவட்டம் காட்பாடி அசிலியும் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிழலில்லா நாட்கள் செயல் விளக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆக்சிலியம் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து வேலூரில் நிழல் இல்லா நாட்கள் செயல் விளக்கம் நடைபெற்றது. தலைவர் பெ.அமுதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஆர் ஜெயசாந்தி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ் சுப்பிரமணி நிழல் இல்லாத நாள் என்பது குறித்து விரிவான விளக்கம் அளித்து பேசினார். துணைத்தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகிதிதனர்.
மேரி ஜோஸ்பின் ராணி துவக்க உரையாற்றினார் கல்லூரியின் துணை முதல்வர் அமலாவளர்மதி, ஜூலியானா ஏஞ்சல் விக்டர், ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.என்.ஜனார்த்தனன் காட்பாடி செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட கருத்தாளர் மற்றும் மாநில கருத்தாளர் கே விஸ்வநாதன் ஆகியோர் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் குறித்து விளக்கம் அளித்தனர் நிறைவாக மாணவியர் செயலாளர் வினிதா நன்றி கூறினார்.
நிழல் இல்லா நாட்கள், நிழல் இல்லா நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட துணைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது. நிழல் இல்லா நாளா? நிழலே விழாத நாள் எப்படி சாத்தியம் என்று பார்க்கிறீர்களா? அப்படியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது, செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் 'நிழலில்லா நாள்' அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.
தினமும் தானே சூரியன் நம் தலைக்கு மேலே வரும், இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. வருடத்தில் இரண்டு நாட்களில் மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும். அந்த இரண்டு நாட்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாட்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல் விழும். இந்த இரண்டு நிழலில்லா நாட்கள் கூட கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும்.
அதற்கு அப்பால், துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது.என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் பூமியின் அச்சு 23-1/2 டிகிரி சாய்ந்திருக்கிறது என்பதையும் பூமி சுற்றுகிறது என்பதையும் உணரலாம். மேலும் நிழல் இல்லா நாட்களை தொடர்ந்து பூமியின் மீது சூரிய கதிர்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதால் இதை உத்திராயனம் என்றும் டிசம்பர் 21க்கு பிறகு சூர்ய கதிர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதால் இதனை தட்சிணாயனம் என்றும் அழைக்கின்றோம்.தமிழகத்தில் இன்று ஆகஸ்டு 18ஆம் நாள் வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளுர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நிழல் இல்லா நாட்கள் தோன்றும் என்று விளக்கம் கூறப்பட்டது.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக