நீலகிரி மாவட்டத்தில் ஆஸ்கர் புகழை தந்தது ஆனால் வாழ்வாதாரம் அப்படியே உள்ளது சாதனையாளர்களின் வேதனை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் ஆஸ்கர் புகழை தந்தது ஆனால் வாழ்வாதாரம் அப்படியே உள்ளது சாதனையாளர்களின் வேதனை


 ஆஸ்கர் புகழை தந்தது  ஆனால் வாழ்வாதாரம் அப்படியே உள்ளது சாதனையாளர்களின்  வேதனை 


முதுமலை புலிகள் காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர் 


இங்கு தாயை பிரிந்த வந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை  பொம்மன் பெள்ளி தம்பதியினர் தங்கள் குழந்தைகளை போல வளர்த்து வந்தனர்


இதை அறிந்த கார்த்திகி கொன்சால்வேஸ் என்ற பெண் இயக்குநர் இரண்டு குட்டியானைகளை வளர்த்த விதம் பொம்மன் பெள்ளி பட்ட கஷ்டம் அனைத்தையும் இரண்டு ஆண்டுகளாக வனப் பகுதியில் தங்கி ஆவணப்படம் எடுத்தார் "தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்" ஆவணப்படத்தின் காட்சிகள் சிறப்பாக இருந்ததால் அதை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி னவத்தார் சிறந்த ஆவண படமாக தேர்வு பெற்றது இதனால் முதுமலை புலிகள் காப்பகம் உலகப்புகழ் பெற்றது 



தமிழக முதல்வர் ஸ்டாலின் பொம்மன், பெள்ளியை அழைத்து ஒரு லட்சம் பணம் கொடுத்து பாராட்டினார் அதேபோல் பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு ஆகியோர் முதுமலை வந்து தம்பதியினரை பாராட்டி சென்றனர் 



இந்நிலையில் ஆவணபடம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தங்களுக்கு வீடு, நிலம் ,பணம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என்று பொம்மன், பெள்ளி தம்பதியினர் புது குண்டை தூக்கி போட்டுள்ளனர்  



அவர்கள் கூறும் போது " இரவு பகல் பாராமல் வனப் பகுதிக்குள் சென்று அவர்கள் சொன்னபடி நடித்து கொடுத்தோம் வயதான காலத்தில் எங்களுக்கு  நடக்க கூட முடியாது இருந்தாலும் கஷ்டத்தை பொருத்துக்கொண்டு காடு மேடு அலைந்து அவர்கள் சொன்னபடி நடந்தோம் ஆவணப்டம் முடிந்ததும்  எங்களுக்கு வீடு, நிலம், பணம் எங்கள் பேரப் பிள்ளைகளுக்கு நல்லப் படிப்பு கொடுப்பதாக கூறினார்கள் 


ஆனால் எதுவும் தரவில்லை போஃன்: செய்து பார்த்தால் "நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் " என்று கூறுகிறார் "உங்கள் அக்கவுண்ட்டில் பணம்  போட்டிருக்கிறேன்" என்கிறார்


 ஆனால் ஒன்றுமில்லை ஏமாற்றுகிறார்கள் எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் இப்ப கூட பழனி ஆண்டவர் கோயில் முன்பு தான் இருக்கிறேன் எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்" என்றார்.



இதற்கிடையே சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரவீன் ராஜ் என்பவர் பொம்மன் பெள்ளியை , முகமது மன்சூர் என்ற வக்கீலிடம் அழைத்து சென்று அவர்களின் பிரச்சனை குறித்து பேசியுள்ளார் இதை தொடர்ந்து வழக்குரைஞர் முகமது மன்சூர்,  பட தயாரிபபாளர் , இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 



இது குறித்து பிரவீன் ராஜ் கூறும் போது 

"இந்த ஆவண படம் எடுக்க அவர்கள் பல கஷ்டங்களை பட்டுள்ளார்கள் படபிடிப்பு முடிவில் வீடு, பணம் பேரன்களுக்கு படிப்பு கொடுப்பதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர் 


. ஆஸ்கர் விருது என்பது அதில் நடித்த யானை,  பூனை என எல்லோருக்கும் சொந்தமானது தான். அந்த ஆஸ்கர் விருதை இரண்டு நாட்கள் பொம்மன் வீட்டில் வைத்திருக்கிலாமே அப்படி என்ன தீண்ட தகாதவர்களா ? அவர்கள் ?

ஆஸ்கர் விருது கிடைத்ததன் மூலம் தயாரிப்பாளர் இயக்குநருக்கு   ஏழு கோடி ரூபாய் வரை பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது


 ஆவணப்படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில்   ஒரு பகுதியை பொம்மன் பெள்ளிக்கு கொடுப்பதாக உறுதி அளித்தனர் 


ஆனால்  அதை செய்யவில்லை  அதேப் போல் வீடு கட்டி தருவதாகவும் கூறியுள்ளார்கள்  இப்பொழுது கேட்டால் போஃனை எடுப்பதில்லை  விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் " 

என்றார் 


ஆஸ்கர் விருது கிடைத்ததும்  இயக்குநருக்கு  பாராட்டு மழை பொழிந்தது ஆனால் அதே வேகத்தில் இப்போது  இந்த குற்ற சாட்டும் பரவி வருகிறது


இந்த ஆஸ்கர் விருதால் தானும் தன் இன மக்களும் மேன்மை அடைவோம் என எதிர் பார்த்தோம் ஆனால் விடிவு இல்லை 



ஆஸ்கர் புகழை தந்தது  ஆனால் வாழ்வாதாரம் அப்படியே உள்ளது என இந்த சாதனையாளர்கள் வேதனை தெரிவித்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/