திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில், உலக தாய்ப்பால் வார விழா முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பாக உலகத் தாய்பால் வாரத்தை அதனை முன்னிட்டு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கிரிஜா கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரச்சுரம் வழங்கினர்.. பின்னர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி. கிரிஜா கூறுகையில்:-
தாராபுரம் பேருந்து நிலையத்தில் சில நீண்ட நாட்களாக செயல்பாடுகள் இல்லாமல் இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை இன்று முதல் புதுப்பொலிவுடன் மற்றும் பாதுகாப்புகள் அம்சங்கள் உடைய அறையாக மாற்றப்பட்டு அனைத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையாக இயங்கி வருகிறது அதற்கு உண்டான துண்டு பிரச்சாரங்கள் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த அனைத்து பெண்களுக்கு மட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது மேலும் அந்த அறையை தாய்மார்கள் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் என கூறினார்..
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,நகர கழக செயலாளர் முருகானந்தம்,
நகர மன்ற துணைத் தலைவர் ரவிசந்திரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்..
நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகரத் துணைச் செயலாளர் செலின் பிலோமினா,நகர பொருளாளர் கபடி சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் யூசுப், அய்யப்பன், நகர மன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர், ஸ்ரீதரன்,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜீவா ஜெயக்குமார்,21 வது வார்டு செயலாளர் அருள்,சமூக நலத்துறை சார்ந்த பணியாளர்கள், சமூக நலத்துறை சார்ந்த பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக