நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையில தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஆர்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையில தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஆர்பாட்டம்


பல்வேறு வகையில தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஆர்பாட்டம் 


நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி உதகை ஏடிசி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோக்களை  தடுத்து நிறுத்த வேண்டும் 13-062022-ல் போடப்பட்ட சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் 


சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து பேக்கேஜ் என்ற முறையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து செல்வதால்  சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் சார் ஆட்சியர் அவர்களால் போடப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 


சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் 


சுற்றுலா வாகனங்களை குறிவைத்து காவல்துறை சார்பில்  அபராதம் விதிப்பதால் சுற்றுலா வாகனங்கள் ஓட்டுனர்கள் மன உளைச்சலில் உள்ளனர் இதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது 


இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை  எழுப்பினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/